Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் முதல் மீன்கள் அருங்காட்சியகம் / INDIA'S FIRST FISH MUSEUM

TAMIL

  • வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல் பிரதேசத்தில் முதல் ஒருங்கிணைந்த மீன்கள் பூங்கா மற்றும் மீன்கள் அருங்காட்சியகம் அமையவுள்ளது. 
  • சுபன்சிரிப் மாவட்டத்தில் உள்ள புல்லா கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் டாரின் மீன் பண்ணை, ஒருங்கிணைந்த மீன்கள் பூங்காவாக மேம்படுத்தப்பட உள்ளது. 
  • மத்திய மீன் வளத்துறை அமைச்சகத்தின் கீழ், பிரதான் மந்திரி மத்திய சம்பட யோஜனா என்ற திட்டத்தின் கீழ் , இதற்காக நடப்பு நிதியாண்டில் முதல் தவணையாக ரூ.43.59 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 
  • அழிவின் விளிம்பில் இருக்கும் பல அரிய மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில், ஏறத்தாழ அனைத்து வகையான மீன்களும் இடம்பெறுமென கூறப்பட்டுள்ளது.
  • மேலும் மீன் வளர்ப்பு மற்றும் அது சார்ந்த வணிகத்தில் ஆர்வம் காட்டும் மக்களுக்கு பயிற்சி மையமாகவும் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இத்தகைய பிரத்யேக மீன்கள் அருங்காட்சியகம், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
ENGLISH
  • Arunachal Pradesh, one of the North-Eastern states, will set up the first integrated fish park and fish museum. The existing Tarin fish farm at Bulla village in Subansirib district is to be developed into an integrated fish park.
  • Under the Pradhan Mantri Madhya Sampada Yojana under the Union Ministry of Fisheries, the Central Government has allocated Rs.43.59 crore as the first installment in the current financial year.
  • In order to increase the number of rare fishes that are on the verge of extinction, the museum is said to be a tourist attraction and will feature almost all kinds of fishes.
  • It has also been announced that a training center will be established for people interested in fish farming and related business. This is the first time that such a dedicated fish museum is being set up in India, especially in the northeastern states.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel