Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது / LAUNCH OF INDIA'S FIRST PRIVATE ROCKET SUCCESS

  • இந்தியாவில் முல் முறையாக ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் 'விக்ரம்-எஸ்' (Vikram-S) நவம்பர் 18-ம் தேதி விண்வெளிக்கு செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது.
  • அதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை நவ. 18, காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவியது.
  • இந்த ராக்கெட் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். 83 கிலோ எடையை தூக்கி செல்லும் இந்த ராக்கெட் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது.
  • ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது. 
  • இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்படுகிறது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel