மெட்டா (META) இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் சந்தியா தேவநாதன் மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.
சந்தியா தேவநாதன் ஆந்திராவில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் 1994 ஆண்டில் பி.டெக் (B-tech) கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றுள்ளார்.
அதன் பிறகு தன்னுடைய எம்பிஏ (MBA) படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் 1998 ஆம் ஆண்டு முடித்தார். 2014 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தலைமை பண்பை பற்றிய படிப்பை முடித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசியாவின் குழு இயக்குனராக பணியாற்றினார். அதன் பின்பு எட்டு மாதங்கள் கழித்து மெட்டா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். சிங்கப்பூர் மெட்டா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும், வியட்நாமின் தொழில் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
0 Comments