ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவராக பொறுப்பு வகித்த வந்த அனில் சஹஸ்ரபுதே 2021 செப். 1ல் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக்குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் தற்காலிக தலைவராக அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அசாமின் கவுஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குனர் டி.ஜி.சீதாராமன் ஏ.ஐ.சி.டி.இ.யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.
இந்த பொறுப்பில் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை சீதாராமன் பணியாற்றுவார்.
இதற்கு முன் கர்நாடகாவின் பெங்ளூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் சிவில் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியராக பணியாற்றினார்.
0 Comments