ஜோர்டான் நாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆடவருக்கான 63 கிலோ எடைப் பிரிவில் ஷிவ தபா களம் கண்டார். இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் ரஸ்லான் உடன் மோதினார்.
இதில், சிறப்பாக செயல்பட்ட ஷிவ தபாவுக்கு, எதிர்பாராதவிதமாக வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால், இரண்டாவது சுற்றோடு வெளியேறினார். எனவே, உஸ்பெகிஸ்தான் வீரர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஷிவ தபா வெள்ளிப் பதக்கத்தையே வசப்படுத்தினார். இருப்பினும், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆடவர் பிரிவில் 6-வது பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தினார்.
மேலும், இத்தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா 4 தங்கம், இரண்டு வெள்ளி உட்பட 12 பதக்கங்களை வென்றது.
0 Comments