Recent Post

6/recent/ticker-posts

உலகின் நீளமான பயணிகள் ரயில் புதிய சாதனை படைத்த சுவிட்சர்லாந்து / Switzerland breaks new record for world's longest passenger train

  • சுவிட்சர்லாந்தில் நூறு ரயில் பெட்டிகளுடன் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் நீளமுள்ள, உலகின் நீளமான பயணிகள் ரயிலை இயக்கி, கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளது. 
  • ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் முதல் ரயில் சேவை துவங்கப்பட்டு, 175வது ஆண்டு ஆனதை கொண்டாடும் விதமாக இயக்கப்பட்ட இந்த சாதனை ரயில் பயணத்தில் 150 பேர் பயணித்தனர். 
  • இந்த ரயிலின் முன்பக்கத்தில் 'ஆல்பைன் குரூஸ்' டிஜிட்டல் முறையில் எழுதப்பட்டிருந்தது. யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள 'அல்புலா-பெர்னினா' என்ற பாதையில், ரயில் தனது முதல் பயணத்தில் 24.9 கி.மீ தூரத்தைக் கடந்தது. 
  • மேலும், ஸ்விஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரை துரிதமாகக் கடந்துச் சென்றது. இது பிராடாவிலிருந்து பிற்பகல் 2:20 மணிக்கு புறப்பட்டு அல்வானியூவை சரியாக 3:30 மணிக்கு வந்தடைந்தது. 
  • கிட்டத்தட்ட 45 நிமிடங்களில் இந்த ரயில், 22 சுரங்கப்பாதையும், 48 பாலங்களையும் தனதுப் பாதையில் கடந்துள்ளது. கிட்டத்தட்ட 4,550 இருக்கைகள் மற்றும் 2,990 டன் எடையுள்ள இந்த ரயில், ஒரு மணி நேரத்திற்கு 30- 35 கி.மீ. என்ற வேகத்தில் பயணித்தது. 
  • முன்னர் சரக்கு ரயில்கள் தான் நீளமான ரயில்கள் என்ற சாதனையைப் படைத்திருந்தது. தற்பொழுது பயணிகள் ரயில், அந்த சாதனையை முறியடித்தது என ரேடியன் ரயில்வே அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel