Recent Post

6/recent/ticker-posts

ட்ராக் கேடி செயலி / TRACK KD APP

TAMIL

  • தமிழக காவல் துறை குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ட்ராக் கேடி என்ற கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
  • மேலும், குற்றவாளிகளின் மீதான குற்றப்பத்திரிகை விவரங்கள், ரெளடிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை போ பிணைக்கப்பட்டுள்ளனா் உள்ளிட்ட தகவல்கள் இதில் இடம் பெற்றிருக்கும். 
  • பிணை பத்திரங்களின் காலாவதி தொடா்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் போன்ற தகவல்களை இந்த செயலியால் வகைப்படுத்த முடியும். 
  • ஒரு குற்றவாளி தொடா்பான தகவல்களை விரைவாகவும், தெளிவாகவும், நுட்பமாகவும் ஒரு நொடி பொழுதில் காவல் துறை அதிகாரிகளுக்கு இந்தத் செயலி வழங்கும். 
  • இந்தச் செயலில் தற்போது 39 மாவட்டங்கள், 9 மாநகர ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திரப் பதிவேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • இந்தச் செயலி மூலம் குற்றவாளிகளையும் ரெளடிகளையும் எளிதாக கண்காணிக்க முடியும். இதன் தொடக்க விழா சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  • தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, செயலியை அறிமுகப்படுத்தி, சேவையைத் தொடக்கிவைத்தாா். 
  • முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பி.தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தாா். சென்னை பெருநகர காவல் துறையின் கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ENGLISH
  • Tamil Nadu Police Department is taking various measures to prevent crimes. As a part of this, a mobile app named Track KD has been introduced. Also, it will contain information such as charge sheet details of criminals, number of arrests, how many have been bound under probation sections.
  • The app can categorize information like bail bond expiry alerts, pending cases, prosecutions, crime types etc. The app provides police officials with quick, clear and sophisticated information about a criminal in a split second.
  • In this process, historical records of more than 30 thousand criminals in 39 districts and 9 municipal Commissionerate's have been uploaded. 
  • This app can easily track criminals and criminals. The inaugural ceremony was held at the office of the Director General of Tamilnadu Police in Chennai on Friday.
  • Director General of Tamil Nadu Police Department C. Shailendrababu launched the app and started the service.
  • Earlier, law and order ADGP P. Thamaraikannan presided over the program. Chennai Metropolitan Police Department Additional Commissioner of Police Prem Anand Sinha and others participated.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel