Recent Post

6/recent/ticker-posts

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி / VILLAGE POVERTY ALLEVIATION SOCIETY FUND

TAMIL
  • புதுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும் (கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியாக) குறைந்த பட்சம் ரூ. 8 இலட்சம் முதல் ரூ. 12 இலட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்படும். 
  • மேலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் குடும்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி மூன்று தவணைகளாக (40 : 40 : 20) குறிப்பிட்ட இலக்குகளை அடைந்த பின்பு விடுவிக்கப்படும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் துவக்க நிதியில் செயல்படுத்த வேண்டிய செயல்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்த பிறகு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் முதல் தவணை மற்றும் அடுத்தடுத்த தவணைகள் கீழ்கண்ட நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்படும். 
  • மேலும் முதல் தவணை விடுவிக்கப்படும் போது பிற்சேர்க்கை - 1 கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி ஒப்பந்தத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கமும் மாவட்ட சங்கமும் கையொப்பமிட வேண்டும்
  • அ. மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு குழுவின் திருப்திகரமான மதிப்பீட்டின் அடிப்படையில்
  • ஆ. சமூக தணிக்கைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்
  • இ. கிராம சபையின் ஒப்புதலின் அடிப்படையில் கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி விடுவிக்கப்படும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியின் கீழ் செலவினம் மேற்கொள்ளும் முன் கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி கையேட்டினை கிராம சபையில் வைத்து விவாதித்து ஒப்புதல் பெறவேண்டும்.
இந்நிதியை முதல் மற்றும் இரண்டாவது தவணையில் பின்வரும் மூன்று வகையாக பிரிக்கலாம்
  • திறன் வளர்ப்பு நிதி (35 சதவிகிதம்)
  • சிறப்பு நிதி (50 சதவிகிதம்)
  • இளைஞர் மேம்பாட்டு நிதி (15 சதவிகிதம்)
இந்நிதியை மூன்றாம் தவணையில் பின்வரும் இரு வகையாக பிரிக்கலாம்:
  • திறன் வளர்ப்பு நிதி (60 சதவிகிதம்)
  • இளைஞர் மேம்பாட்டு நிதி (40 சதவிகிதம்)
  • திறன் வளர்ப்பு நிதி மக்கள் அமைப்புகளை வலுப்படுத்தவும், சிறப்பு நிதி மாற்றுத் திறனாளி மற்றும் நலிவுற்றோர் வளர்ச்சி பெற்று சமூக மேம்பாடு அடையவும், இளைஞர் மேம்பாட்டு நிதி இளைஞர் அமைப்புகளை உருவாக்கி பொருளாதார மேம்பாடு அடையவும் பயன்படுத்தப்படும்.
ENGLISH
  • For the implementation of Pudhu Vazhvu Scheme each Village Poverty Alleviation Society (as Village Poverty Alleviation Society Fund) has a minimum of Rs. 8 lakh to Rs. 12 lakh will be allotted. And additional funds will be allocated based on the number of families belonging to Adi Dravidian and tribals.
  • The Village Poverty Alleviation Society Fund will be released in three installments (40 : 40 : 20) after achieving certain targets.
  • The first installment and subsequent installments of the Village Poverty Alleviation Society will be released on the following condition after completion of all the activities required to be implemented in the start-up fund of the Village Poverty Alleviation Society. 
  • And when the first installment is released Annexure – 1 Village Poverty Alleviation Society Fund Agreement should be signed by the Village Poverty Alleviation Society and the District Society.
  • Based on satisfactory assessment by the Evaluation and Monitoring Committee
  • Based on the recommendation of the Social Audit Committee
  • The Village Poverty Alleviation Society Fund will be released based on the approval of the Gram Sabha.
  • Before making any expenditure under Gram Poverty Alleviation Sangh Fund, the Village Poverty Alleviation Sangh Fund Manual should be discussed and approved in the Gram Sabha.
The fund can be divided into the following three categories in the first and second installments
  • Capacity Building Fund (35 percent)
  • Special Fund (50 percent)
  • Youth Development Fund (15 percent)
This fund can be divided into the following two categories in the third installment
  • Capacity Building Fund (60 percent)
  • Youth Development Fund (40 percent)
  • Capacity building funds will be used to strengthen people's organizations, special funds will be used for the development of differently abled and disadvantaged people and achieve social development, and youth development funds will be used to create youth organizations and achieve economic development.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel