Recent Post

6/recent/ticker-posts

1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை / Allotment of Rs.420 crores for purchase of 1000 new buses - Tamil Nadu Government Ordinance

  • 2022 - 23ஆம் தேதி நிதியாண்டில் தமிழகத்திற்கு 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என தமிழக சட்டப்பேர்வையில் 110 விதியின் கீழ் ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 
  • அதன்படி, அதற்கான அரசாணையை தமிழக அரசு போக்குவரத்து துறை தற்போது வெளியிட்டிருக்கிறது. பழைய பேருந்துகளை கழிவு செய்துவிட்டு, புதிய பேருந்துகளை வாங்குவதற்காக இந்த 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. 
  • மாநகரப் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு சேர்த்து மொத்தமாக 1000 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.
  • ஒரு பேருந்துக்கு பல ரூ. 42 லட்சம் என மதிப்பீடு செய்து 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
  • விழுப்புரம் கோட்டத்துக்கு 180 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 100 பேருந்துகளும் , கோவை கோட்டத்திற்கு 120 பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன. 
  • இதேபோல் கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 270 பேருந்துகளும், நெல்லை கோட்டத்திற்கு 130 பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel