Recent Post

6/recent/ticker-posts

ஒட்டன்சத்திரத்தில் 117 ஏக்கர் நிலத்தில் 4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்று நடவு செய்து உலக சாதனை / A world record by planting 6 lakh saplings in 4 hours in 117 acres of land in Otanchatra

  • ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 117 ஏக்கர் நிலத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன. 
  • இதைத் தொடர்ந்து இந்த இடத்தை துய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உலக சாதனை முயற்சியாக 4மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
  • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உட்பட 16,500 பேர் இணைந்து ஒரே நேரத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
  • நிறைவாக குறுங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பூங்காவில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மா. மதிவேந்தன் ஆகியோரும் மரக்கன்றுகள் நட்டனர்.
  • பின்னர் நடந்த விழாவுக்கு ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். அப்போது 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்ததற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை அமெரிக்காவைச் சேர்ந்த எலைட் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவன நிர்வாக அதிகாரிகள் ரவி பால்பக்கி,நவுரா ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர்.
  • இதே போல், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக்ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய உலகசாதனை அங்கீகரிப்பு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் சான்றிதழ்களை வழங்கினர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel