Recent Post

6/recent/ticker-posts

17வது கட்டுமான பொருட்கள் தொடர்பான சர்வதேச மாநாடு / 17TH INTERNATIONAL CONFERENCE ON CEMENT & CONSTRUCTION MATERIALS

TAMIL

  • சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்களுக்கான தேசிய கவுன்சில், சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் தொடர்பான 17-வது சர்வதேச மாநாட்டை நடத்த உள்ளது. 
  • மத்திய வர்த்தக அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான இது இந்த ஆண்டு நடத்தும் மாநாட்டின் கருப்பொருள், ‘பூஜ்ய கார்பன் உமிழ்வை நோக்கி முன்னேறுதல்’ என்பதாகும்.
  • டிசம்பர் 6-ம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் திரு.அனுராக் ஜெயின் தொடங்கி வைக்கிறார். 9-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் வர்த்தகத்துறை இணையமைச்சர் திரு.சோம் பிரகாஷ் பங்கேற்கிறார்.
  • எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல், சுழற்சி பொருளாதாரம், சிமெண்ட் தொழில்துறையில் ஒட்டுமொத்த தரம் போன்றவை தொடர்பான அரசின் விருதுகளும் இந்த மாநாட்டில் வழங்கப்படுகின்றன. 
  • 20 அமர்வுகளை கொண்டதாக நடைபெறும் இந்த மாநாட்டில் 150 தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் கொண்ட தொழில்நுட்ப கண்காட்சியும் இடம்பெறுகிறது.
ENGLISH
  • National Council for Cement and Construction Materials to organize 17th International Conference on Cement and Construction Materials.
  • The theme of this year's conference, which is a research and development organization under the administrative control of the Union Ministry of Commerce, is 'Moving towards Zero Carbon Emissions'.
  • The conference, which will be held from December 6 to 9, will be inaugurated by Mr. Anurag Jain, Secretary, Union Ministry of Industry and Commerce. Minister of State for Commerce Mr. Som Prakash will participate in the closing ceremony on 9th.
  • Government awards related to energy conservation, environment, circular economy, overall quality in cement industry etc. are also presented at this conference.
  • 150 technical research papers are presented in this 20-session conference. There will also be a technology exhibition featuring products from more than 80 companies from India and other countries.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel