Recent Post

6/recent/ticker-posts

பெங்களூரில் 'ஜி - 20' பிரதிநிதிகள் பொருளாதாரம் கூட்டம் துவக்கம் / Economic meeting of 'G-20' representatives begins in Bangalore

  • 'ஜி - 2௦' மாநாட்டின் ஒரு அங்கமாக, நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகளின் மூன்று நாட்களுக்கான கூட்டம், பெங்களூரில் துவங்கியது. 'ஜி - 2௦' தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
  • இதன் உச்சி மாநாடு, 2023 செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் புதுடில்லியில் நடக்க உள்ளது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பர்.
  • இதற்கு முன்னதாக, நாடு முழுதும் 200 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதன் ஒரு அங்கமாக, முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம், பெங்களூரு, தேவனஹள்ளி அடுத்த நந்திமலை சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் துவங்கியது. 
  • இந்தியா சார்பில், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அஜய் செய்ட், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா ஆகியோர் தலைமை வகித்து பேசினர்.
  • 'ஜி - 2௦' உறுப்பு நாடுகளில் இருந்தும், இந்தியாவால் அழைக்கப்பட்ட பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். சர்வதேச அளவில் சந்திக்கும் பல்வேறு விதமான நிதி பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • பணவீக்கம், உணவு, எரிசக்தி பாதுகாப்பு, காலநிலை மாற்றம் ஆகியவற்றின் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel