Recent Post

6/recent/ticker-posts

ரூ.300 கோடி அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு தொடங்கிவைக்கப்பட்டது / Rs.300 crore Angul-Balram rail link inaugurated

  • தல்சார் நிலக்கரி வயல்களில் இருந்து நிலக்கரியை வெளியே கொண்டு வரும் 14 கி.மீ. நீள அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு தொடங்கி வைக்கப்பட்டது.  
  • தினசரி 40 ஆயிரம் டன் என்ற நிலக்கரியை கொண்டு செல்லும்  மகாநடி நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் திறனை அதிகரிக்க இது வகைசெய்கிறது. 
  • ரூ.300 செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் இணைப்பு தினசரி 10 பெட்டிகள் அளவுக்கு நிலக்கரியை கூடுதலாக கொண்டு செல்லக்கூடியதாகும்.
  • இந்த ரயில் இணைப்பை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, மத்திய கல்வி, திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ரயில்வே அமைச்சர் திரு அஸ்விணி வைஷ்ணவ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
  • அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு, 68 கி.மீ. தூர உள்வழித்தடம்- அங்குல்-பல்ராம்-புதுக்கடியா ஜராபதா-டென்டுலோய் ரயில் இணைப்பின் முதல் கட்டமாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel