Recent Post

6/recent/ticker-posts

ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூரில் ரூ.4,194 கோடியில் 3 கூட்டு குடிநீர் திட்டங்கள் - தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை / 3 joint drinking water projects in Ramanathapuram, Dindigul and Tiruvallur at a cost of Rs 4,194 crore - Government of Tamil Nadu approves and orders

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் அம்ருத் 2.0 திட்டம் மற்றும் மூலதன மானிய நிதியின் (சிஜிஎப்) ஆகியவற்றின் கீழ் ரூ.4,194.66 கோடியில் ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது.
  • காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ.4,187.84 கோடி மதிப்பில் ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம், கீழக்கரை நகராட்சிகள், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிகள், ராமநாதபுரம், திருப்புலானி, பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், மண்டபம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 2,306 ஊரகக் குடியிருப்புகளுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • அதேபோல, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, நெய்க்காரப்பட்டி, கீரனூர் பேரூராட்சிகள் ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1,422ஊரகக் குடியிருப்புகள் என3,19,192 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் 30.40 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • திருவள்ளூர் மாவட்டம் புதுஏரி கால்வாயில் ராமன்ஜி கண்டிகைகிராமத்துக்கு அருகில், 5 ஆழ்துளைகிணறுகளை நீராதாரமாகக் கொண்டு ரூ.3.64 கோடியில் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம் அம்மம்பாக்கம் மற்றும் கூனிப்பாளையம் ஊராட்சிகளைச் சார்ந்த அம்மம்பாக்கம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 717 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் சுமார் 4,900 மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • மேலும், மாமண்டூர் ஏரியில் 4 ஆழ்துளை கிணறுகளை நீராதாரமாகக் கொண்டு ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த பூண்டி ஊராட்சி ஒன்றியம் மாமண்டூர் ஊராட்சியைச் சார்ந்த வேலகாபுரம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 522 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் சுமார் 4,050 மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டங்கள் நிறைவடையும் போது தினசரி நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளுக்கு 135 லிட்டர்,பேரூராட்சிகளுக்கு 90 லிட்டர், ஊரக பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel