Recent Post

6/recent/ticker-posts

ரூ.4,250 கோடி நிதியுதவி - ஜெர்மன் வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம் / MOU BETWEEN GERMANY BANK & TAMILNADU GOVERNMENT


TAMIL
  • ஜெர்மன் மேம்பாட்டு வங்கி உதவியுடன் நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி திட்டம், சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாத்து நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. 
  • 2 கட்டங்களாக திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதி உதவியுடன் (சுமார் ரூ.4,250 கோடி), மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது. 
  • அதற்காக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் இந்திய அரசு இடையே கடந்த மாதம் 500 மில்லியன் யூரோ (சுமார் ரூ.4,250 கோடி) கடன் ஒப்பந்தம் புது டெல்லியில் கையெழுத்தானது. 
  • அதனைத் தொடர்ந்து, சென்னையில் கடந்த 2ம் தேதி ஜெர்மன் மேம்பாட்டு வங்கி, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • மேலும், ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே தனி ஒப்பந்தமும் கையெழுத்தானது. இவ்விரண்டு ஒப்பந்தங்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது.
ENGLISH
  • A financing program for urban infrastructure with the help of the German Development Bank was launched with the objective of improving the environment, protecting natural resources and improving the quality of life of urban residents.
  • The project has been completed in 2 phases. As a follow-up, the third phase of the Sustainable Urban Infrastructure Financing Program will be implemented with a €500 million (approx. Rs. 4,250 crore) grant from the German Development Bank.
  • To that end, a loan agreement of 500 million euros (about Rs. 4,250 crore) was signed between the German Development Bank and the Government of India in New Delhi last month.
  • Subsequently, a project agreement was signed between German Development Bank, Tamil Nadu Government and Tamil Nadu Urban Infrastructure Financial Services Corporation on 2nd in Chennai.
  • Also, a separate agreement was signed between German Development Bank and Tamil Nadu Urban Infrastructure Financial Services Corporation. Both the agreements were exchanged in the presence of Chief Minister M. K. Stalin.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel