திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ரூ.4350 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் / In Agartala, Tripura, the Prime Minister dedicated projects worth Rs.4350 crore to the country and laid the foundation stone for new projects
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ரூ.4350 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கான கிரஹ பிரவேஷ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.3400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த வீடுகள், 2 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளைச் சென்றடையும்.
சாலை இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, அகர்தலா நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் அகர்தலா புறவழிச்சாலை (காயர்பூர் - அம்தாலி) NH-08ஐ விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 230 கிமீ நீளமுள்ள 32 சாலைகளுக்கும், 540 கிமீ தூரத்திற்கு மேல் உள்ள 112 சாலைகளை மேம்படுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
ஆனந்த்நகர் மற்றும் அகர்தலா அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டையும் பிரதமர் திறந்து வைத்தார்.
0 Comments