Recent Post

6/recent/ticker-posts

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் என்ற துறை உருவாக்க ரூ.5 கோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் / Chief Minister M.K.Stalin donates Rs.5 crore for setting up Department of Tamil Literature in Jawaharlal Nehru University, Delhi

  • புதுடெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று ஜவஹர்லால் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்தி துலிப்புடி பண்டிட்டிடம் வழங்கினார்.
  • தமிழறிஞர்களான நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா. மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். 
  • மறைந்த தமிழறிஞர்கள் நெல்லைகண்ணன் நூல்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கந்தர்வன் என்கிற நாகலிங்கம் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சோமலெ நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ந. ராசையா நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தஞ்சை பிரகாஷ் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்காக அவர்களின் மரபுரிமையரிடம் வழங்கினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel