Recent Post

6/recent/ticker-posts

தேசியக் கட்சியாக மாறிய ஆம் ஆத்மி / AAM AADMI PARTY BECOMES NATIONAL PARTY

  • கீழ்க்கண்ட மூன்று நிபந்தனைகளில் ஒன்றை பெற்றிருக்கும் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் தேசியக்கட்சி அங்கீகாரம் வழங்குகிறது. 
  • 1. லோக்சபாவில் மொத்தம் உள்ள 543 இடங்களில், 2 சதவீத இடங்களை, அதாவது 11 எம்.பி.,க்களை மூன்று மாநிலங்களில் இருந்து பெற வேண்டும். 
  • 2. குறைந்தது நான்கு மாநில தேர்தல்களில் 6 சதவீத ஓட்டுகளும், லோக்சபாவில் நான்கு எம்.பி.,க் களும் பெற வேண்டும்.
  • 3. குறைந்தது நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும். இங்கு, 6 சதவீத ஓட்டுகள் அல்லது குறைந்தது இரண்டு எம்.எல்.ஏ.,க்களை பெற்றிருக்க வேண்டும்.
  • இதன்படி ஏற்கனவே, டில்லி, பஞ்சாப், கோவா மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்த ஆம் ஆத்மி, நான்காவதாக குஜராத்திலும் ஐந்து எம்.எல்.ஏ.,க்களைப் பெற்றதால் தேசியக்கட்சியாக உருவெடுத்துள்ளது. 
  • தற்போது, பா.ஜ., காங்., தேசியவாத காங்., திரிணமுல் காங்.,, தேசிய மக்கள் கட்சி - சங்மா, பகுஜன் சமாஜ், இ.கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., என எட்டு தேசிய கட்சிகள் உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel