68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றன.
இறுதியில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக வேட்பாளர்கள் 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 43.9 சதவீதம், பாஜகவுக்கு 43 சதவீதம், இதர கட்சிகளுக்கு 10.4 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. சுமார் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
0 Comments