Recent Post

6/recent/ticker-posts

பெரு பெண் அதிபர் டினா பதவியேற்பு / DINA SWORN AS PRESIDENT OF PERU

  • தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. 
  • இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார்.
  • இந்நிலையில், அவசர நிலையை பிரகடணப்படுத்திய அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, அந்த நாட்டின் தொலைகாட்சி முன் தோன்றி பொதுமக்களிடம் பேசினார்.
  • நாட்டில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அவர் அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அதிபர் பெட்ரோ தெரிவித்தார். 
  • அதிபரின் முடிவை எம்.பி.க்கள் நிராகரித்தனர். ஆனால் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்றம் அவசரமாகக்கூடி அவருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கை எடுத்தது. அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • தீர்மானத்துக்கு ஆதரவாக 101 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 6 வாக்குகள் கிடைத்தன. 10 பேர் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கைக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் அதிபர் பதவி இழந்தார்.
  • அடுத்த சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிபர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்து பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபர் பொறுப்பு ஏற்றார். 60 வயதான டினா, 2026-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகிக்கப்போவதாக தெரிவித்தார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel