ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவு / France, Britain support India's permanent membership in the UN Security Council
பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு மற்றும் பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் உள்ளிட்ட முக்கிய இரு நிகழ்வுகள் இந்தியாவின் தலைமையின்கீழ் நடைபெறுகிறது.
சா்வதேச பாதுகாப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் குறித்த விவாதம் பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தலைமையில் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது பேசிய ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதா் நிக்கோலஸ் டிரிவியா் ஜொமனி, பிரேஸில், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு பிரான்ஸ் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தாா்.
0 Comments