Recent Post

6/recent/ticker-posts

யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்ற பிரஞ்சு ரொட்டி / FRENCH BREAD GETS UNESCO HERITAGE STATUS

  • கல்வி, கலை, அறிவியல், கலாசாரம் உள்ள நாடுகளிடையே அமைதி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ. 
  • தற்போது பகெட் ரொட்டி உலக பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.பகெட் என்பது மாவு, தண்ணீர், உப்பு, ஈஸ்ட் உள்ளிட்டவை கலந்து செய்யப்படும் ஒர் ரொட்டி வகை. 
  • இது பிரஞ்சு நாட்டின் பிரதான உணவாக உள்ளது. 1839 ஆம் ஆண்டில் வியன்னாவைச் சேர்ந்த ஒர் பேக்கரும், தொழில்முனைவோருமான ஆகஸ்ட் ஜாங் என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது.
  • அவர் ஒரு நீராவி அடுப்பைப் பயன்படுத்தி மென்மையான ரொட்டியின் சுவையை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இது 1920 ஆம் ஆண்டு 'பகெட்' என்கிற அதிகாரப்பூர்வ பெயரைப்பெற்றது.
  • பகெட் விற்பனை சரிவு காரணமாக இந்த ரொட்டியைத் தயாரித்து விற்றுவந்த 400 பேக்கரிகள் நஷ்டத்தில் இயங்கின. இதனால் 1970 ஆம் ஆண்டிலிருந்து இவை கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டன. பிரான்ஸில் பல்பொருள் அங்காடிகளின் பெருக்கம் காரணமாக உள்ளூர் பேக்கரிகளுக்கு இந்த பாதிப்பு உண்டானது.
  • நகரவாசிகள் பலர் அதிகளவில் பீட்சா, பர்கர் சாப்பிடத் துவங்க, பகெட் ரொட்டி காலப்போக்கில் அவர்களுக்கு மறந்துபோனது. 
  • இந்த நிலையை மாற்ற 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய உணவுப் பட்டியலில் பகெட் ரொட்டி சேர்க்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை பிரான்ஸ் அரசு முன்வைத்தது. அந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளபட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel