Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்த்தி அறிவித்தது உலக வங்கி / India's economic growth will increase - World Bank

  • கடந்த அக்டோபரில், உலக வங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என, அதற்கு முன் கணித்திருந்த 7.5 சதவீதத்திலிருந்து குறைத்து அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 6.5 சதவீதத்திலிருந்து, 6.9 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. 
  • உலகளாவிய பொருளாதார பாதிப்புகளிலில் இருந்து மீட்சியடைவது மற்றும் எதிர்பார்த்ததை விட இரண்டாவது காலாண்டில் அதிக வளர்ச்சி ஆகியவை காரணமாக, இந்தத் திருத்தத்தை மேற்கொண்டிருப்பதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.
  • உலக கொந்தளிப்புகளுக்கு மத்தியில், ஒரு சர்வதேச நிறுவனம், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை மாற்றி உயர்த்தி அறிவித்துள்ளது, இதுவே முதல் முறையாகும்.
  • 'பிட்ச் ரேட்டிங்ஸ்' நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பில் மாற்றம் எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel