திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, லிவிங் டுகெதரை சட்டவிரோதமாக்கிய இந்தோனேஷியா அரசு / The Indonesian government has outlawed premarital sex and living together
இந்தோனேஷியா ஒரு சர்ச்சைக்குரிய புதிய குற்றவியல் சட்டத்தை இயற்றியுள்ளது, அதில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் சேர்ந்து வாழ்வதை சட்டவிரோதமாக அறிவித்துள்ளது.
புதிய சட்டங்கள் இந்தோனேசியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இருவருக்கும் பொருந்தும் என்று அந்நாட்டு அரசு குறிப்பிபட்டுள்ளது.
பாராளுமன்றத்தால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட புதிய குற்றவியல் சட்டம், 1946 இல் இந்தோனேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைமுறையில் இருந்த கட்டமைப்பை மாற்றி அமைப்பதாக உள்ளது.
முன்மொழியப்பட்ட புதிய சட்டம் 2019 செப்டம்பரில் ஒரு முழு வரைவு வெளியிடப்பட்டபோது மாணவர்கள் தலைமையிலான குழு அதை எதிர்த்து போராடியது.
இது தனிப்பட்ட சுதந்திரங்களைக் குறைக்கும் என்றும் குறிப்பிட்டது. அந்த போராட்டத்தில் குறைந்தது 300 பேர் காயமடைந்தனர். பின்னர் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்ட வரைவு தற்போது சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
0 Comments