Recent Post

6/recent/ticker-posts

ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு / INS WAHIR HANDER OVER TO INDIAN NAVY

  • கடற்படை பயன்பாட்டுக்காக பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து5 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. 
  • இந்த நீர்மூழ்கி கப்பல்கள் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் உருவாக்கப்பட்டன. ஏற்கெனவே ஐஎன்எஸ் கல்வாரி, கந்தேரி, கரன்ஜ் மற்றும் வேலா ஆகிய 4 ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படைக்கு வழங்கப்பட்டுவிட்டன. 
  • இந்நிலையில் 5வது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ்வகிர் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பல்கடற்படையில் விரைவில் சேர்க்கப்படவுள்ளது.
  • இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் சேர்க்கப்படுவது அதன் போர் திறனுக்கு மேலும் ஊக்குவிப்பாக இருக்கும். ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலில் இறக்கப்பட்டது. 
  • இதன் பரிசோதனைகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கின. குறுகிய கால இடைவெளியில் ஆயுத பரி சோதனை உட்பட அனைத்து பரிசோதனைகளையும் இந்த நீர்மூழ்கி கப்பல் முடித்தது. 
  • கடலில் செல்லும் எதிரி நாட்டு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை இது துல்லியமாக தாக்கும். கடலில் கண்ணி வெடிகளை மிதக்க வைப்பது, கண்காணிப்பு, உட்பல பல பணிகளை இந்த கப்ப லால் மேற்கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel