Recent Post

6/recent/ticker-posts

ஜப்பானின் 'லேண்டர்' கருவி நிலவுக்கு ஏவப்பட்டது / Japan's 'lander' was launched to the moon

  • நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த, 'ஐ ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், லேண்டர் கருவியை தயாரித்தது. 
  • இந்த ஆய்வில் இணைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 'ரோவர்' கருவியை தயாரித்துள்ளது. 
  • இந்த இரு கருவிகளும், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் வாயிலாக, அமெரிக்காவின் கேப் கனாவரெல் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. 
  • எரிபொருள் சிக்கனம் கருதி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லேண்டர் கருவி, பூமியில் இருந்து 16 லட்சம் கி.மீ., துாரம் சென்று நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள ஐந்து மாதங்கள் எடுத்துக் கொள்ளும். 
  • சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் சோதனை விண்கலம் ஐந்து நாட்களில் நிலவை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
  • ஐக்கிய அரபு எமிரேட்சின் ரோவர் கருவிக்கு, துபாய் அரச குடும்பத்தின் பெயரான ரஷீத் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
  • 10 கிலோ எடையுள்ள இந்த ரோவர் கருவி நிலவில் இறங்கி, 10 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel