Recent Post

6/recent/ticker-posts

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் - மக்களவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றம் / KURIVIKAARAR ADDED ON ST - BILL PASSED ON RAJYA SABHA

  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்.14-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளர்களிடம் பேசியிருந்த மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா, தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரை சேர்க்க அனுமதி வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் மசோதா வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 
  • இந்த மசோதாவுக்கு மக்களவையில் அரசியல் வேறுபாடுகள் கடந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவளித்த நிலையில், இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
  • அடுத்தக்கட்டமாக இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel