அமெரிக்காவில் சர்வதேச பதிப்பக குழுமமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் சிஇஓவாக நிஹார் மாளவியா நியமனம் / NIHAR MALAVIYA APPOINTED AS PENGUIN RANDOM HOUSE IN US
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பதிப்பக குழுமமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் புதிய தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியான நிஹார் மாளவியா (48) நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய சிஇஓ மார்கஸ் டோஹ்லே இம்மாத இறுதியில் பதவி விலகுவதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 1ம் தேதி நிஹார் மாளவியா பதவி ஏற்க உள்ளார்.
மாளவியா கடந்த 2019ம் ஆண்டு முதல் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் அமெரிக்க கிளையின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியுமாக பதவி வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments