மலை மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியான பா.ஜ., 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சிம்லாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜிவ் சுக்லா, பூபேஷ் பாகேல், பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் மேலிட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
ஹிமாச்சல் மாநில தேர்தல் பிரசார குழு தலைவரும், ராகுலின் தீவிர விசுவாசியுமான சுக்விந்தர் சிங், கட்சியின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஹிமாச்சலின் அடுத்த முதல்வராக சுக்விந்தர் சிங் பதவியேற்க உள்ளார். மூத்த தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
0 Comments