Recent Post

6/recent/ticker-posts

தமிழக அமைச்சரவை முதல்முறையாக விரிவாக்கம் / TAMILNADU MINISTER CABINET EXPANDED FOR FIRST TIME

  • தமிழக அமைச்சரவை நேற்று முதல்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் உள்ளிட்ட 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.
  • அமைச்சரவையில் 34-வது அமைச்சராகப் பதவியேற்றுள்ள திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • முதல்வர் ஸ்டாலின் வசமிருந்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, கே.ஆர்.பெரிய கருப்பன் கவனித்து வந்த வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், மெய்யநாதன் வசமிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஆகியவை உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
  • அமைச்சரவையில் தங்கம் தென்னரசுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு 10-வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவையில் உதயநிதி முதல் வரிசையில் அமருவார்.
  • ஐ.பெரியசாமி கவனித்து வந்த கூட்டுறவுத் துறை கே.ஆர்.பெரியகருப்பனுக்கும், அவர் கவனித்து வந்த ஊரக வளர்ச்சித் துறை ஐ.பெரியசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல, ஐ.பெரியசாமியிடம் கூடுதலாக இருந்த முன்னாள் ராணுவத்தினர் நலன் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கும், புள்ளியல் துறை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
  • வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் இருந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 
  • கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம் கூடுதலாக இருந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டுள்ளது.
  • அமைச்சர் கே.ராமச்சந்திரன் கவனித்து வந்த வனத் துறை மா.மதிவேந்தனுக்கும், அவர் பொறுப்பு வகித்த சுற்றுலாத் துறை கே.ராமச்சந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel