Recent Post

6/recent/ticker-posts

இ-ஸ்போர்ட்ஸ்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி / UNION GOVERNMENT APPROVES E-SPORTS

  • ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 77வது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கினார். 
  • போட்டி விளையாட்டுகளில் இ-ஸ்போர்ட்சை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசின் விளையாட்டு துறை மற்றும் மின்னணு, தொழில்நுட்ப துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
  • இதுவரை ஆன்லைன் விளையாட்டாகவே இ ஸ்போர்ட்ஸ் கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 
  • ஆனால், இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வீரர்கள் தங்கள் உடல் மற்றும் மன திறன்களைப் பயன்படுத்தி மெய்நிகர், மின்னணு சூழலில் பங்கேற்கும் போட்டி விளையாட்டு என்று இ-ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் கூறி வந்தனர். 
  • சர்வதேச ஒலிம்பிக் சங்கமும் இ-ஸ்போர்ட்சை பிரபலப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel