Recent Post

6/recent/ticker-posts

அனைவருக்கும் நல வாழ்வு திட்டம் - நாட்டிலேயே முதலிடம் பெற்று தமிழகம் சாதனை / Welfare scheme for all - Tamil Nadu achieved first place in the country

  • அனைத்து மக்களுக்கும் தரமான, இலவச மருத்துவ சேவை வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டது 'அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்' ஆண்டுதோறும் டிச.12-ம் தேதி (இன்று) அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டில், 'நாம் விரும்பும் ஆரோக்கியமான எதிர்கால உலகத்தை அனைவருக்கும் உருவாக்குவோம்' என்ற மையக் கருத்துடன் இதற்கான விழா, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2 நாட்களாக (டிச.10, 11)கொண்டாடப்பட்டது. 
  • மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத் துறை நிபுணர்கள் கலந்து கொண்ட இந்தநிகழ்வில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் கவுரவிக்கப்பட்டன.
  • தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் கடந்த அக்.12-ம்தேதி முதல் டிச.8-ம் தேதி வரை 22.59 லட்சம் பேருக்கு தொலைதொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 
  • அந்த வகையில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்ததற்கான பாராட்டு சான்றிதழ், கேடயத்தை தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கி கவுரவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel