Recent Post

6/recent/ticker-posts

கனிம ஆய்வுத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தேசிய கனிம ஆய்வுக் கழகத்திற்கு ரூ. 154.84 கோடி - மத்திய சுரங்க அமைச்சகம் ஒப்புதல் / National Institute of Mineral Research for mineral exploration projects and capacity building Rs. 154.84 Crore - Union Ministry of Mines approved

  • மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கனிம ஆய்வுக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் தலைமையில் நடைபெற்றது.
  • ரூ. 154.84 கோடி மதிப்பில் கனிம ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளவும், திறன்களை மேம்படுத்தவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • நாட்டில் கனிம ஆய்வை ஊக்குவிப்பதற்கான கனிம ஆய்வு திட்டத்தில் கிராஃபைட், இரும்பு, நிலக்கரி, துத்தகநாகம் மற்றும் தொடர்புடைய தாதுக்கள், பாக்சைட், ஈயம், தாமிரம் போன்ற உலோகங்கள், வெள்ளீயம் மற்றும் அது சார்ந்த உலோகங்கள், மாங்கனீசு, சுண்ணாம்பு ஆகியவை அடங்கும்.
  • இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், இந்திய சுரங்க அலுவலகம் ஆகியவற்றின் திறனையும், கனிம ஆய்வையும்  மேம்படுத்துவதற்கு நிதி உதவி வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
  • இந்தக் கனிம ஆய்வுத் திட்டங்களும், ஆய்வு முகமைகளுக்கான நிதி உதவியும், நாட்டிற்கு ஏலம் விடக்கூடிய கனிம தொகுதிகளை வழங்குவதோடு, சுரங்கத் துறையில் தன்னிறைவு அடையவும் உதவியாக இருக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel