Recent Post

6/recent/ticker-posts

ரூ.15,610 கோடியில் 8 புதிய தொழில் முதலீடுகள் - தமிழக அமைச்சரவை ஒப்புதல் / 8 new business investments worth Rs.15,610 crore - Tamil Nadu Cabinet approves

  • தமிழக சட்டப்பேரவையின் 2023-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். 
  • இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆளுநர் உரையில் இடம்பெறும் கருத்துகள், திட்டங்கள், தொழில் முதலீடுகள், புதிய தொழில் கொள்கை குறித்தெல்லாம் விவாதித்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • பின்னர், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழில் துறையில் புதிதாக ரூ.15,610.43 கோடி மதிப்பிலான, 8 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 8,776 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
  • குறிப்பாக, மின்சார வாகனங்கள், மின்கலன் உற்பத்தி, ஆட்டோமொபைல், வயர்லெஸ் தொழில்நுட்பம், ஜவுளி, ஆக்சிஜன் உற்பத்தி தொழில் பிரிவுகளில் இந்த முதலீடுகள் அமைந்துள்ளன. கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டிய பகுதிகளில் புதிய தொழில்கள் அமையும்.
  • தற்போது தமிழகத்தில் மின்னணு வாகனக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டு, சாலை வரி உள்ளிட்ட சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. மின் வாகனங்கள் உற்பத்தி உள்ளிட்டவை தொடர்பான தொழில் கொள்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel