Recent Post

6/recent/ticker-posts

ரூ.19,744 கோடி மதிப்பிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு ஒப்புதல் / Approval for National Green Hydrogen Project worth Rs.19,744 crore

  • மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆரம்ப கட்டமாக ரூ.19,744 கோடி மதிப்பில் இத்திட்டம் தொடங்கப்படும். 
  • இதில் பசுமை ஹைட்ரஜன் மாற்றம் செயல்பாடுகளுக்கு ரூ.17.490 கோடியும், முன்னணி திட்டங்களுக்கு ரூ.1,466 கோடியும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.400 கோடியும், இதர திட்ட செயல்பாடுகளுக்கு ரூ.388 கோடியும் ஒதுக்கப்படும். இத்திட்டத்தை அமல்படுத்துவதற் கான வழிகாட்டுதல்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் உருவாக்கும்.
  • இத்திட்டம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஆண்டுக்கு குறைந்தது 5 மில்லியன் மெட்ரிக் டன்களாக மேம்படுத்தும். இதோடு நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனும் 2030-ம் ஆண்டுக்குள் 125 ஜிகா வாட்டாக அதிகரிக்கும். இது ரூ.8 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழிவகுப்பதோடு, 2030-ம் ஆண்டுக்குள் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகளையும் உருவாக்கும்.
  • நாட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மூலம், ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான படிம எரிபொருட்களின் இறக்குமதியை குறைக்கும். மேலும் 2030-ம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களையும் ஆண்டுக்கு 50 மில்லியன் டன்கள் அளவுக்கு குறைக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel