Recent Post

6/recent/ticker-posts

2022ஆம் ஆண்டு இந்திய தூதரகங்களின் செயல்பாடுகள் / 2022 YEAR END REVIEW OF INDIAN EMBASSY

TAMIL

 • பிரதமரின் பரிந்துரையை ஏற்று, 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நாடுகள் சபை அறிவித்தது. இதன் அடிப்படையில் 2023ம் ஆண்டில் இந்தியாவை சிறுதானியங்களின் சர்வதேச மையமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு கண்ணோட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 • இந்தியாவில் விளைந்த முதல் தானியம் சிறுதானிம்தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. உலகம் முழுவதும் 130 நாடுகளில் சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்ட போதிலும், இதுவே ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் 50 கோடிக்கும் மேற்பட்டோரின் பாரம்பரிய உணவாக உள்ளது.   
 • இந்தியாவில் காரீஃப் பருவத்தின் முதன்மை தானியமான சிறுதானியங்கள், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன், உலகம் முழுவதும், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டே ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில், மத்திய அரசு சிறுதானியங்களை முன்னிலைப்படுத்தியது.
 • 2022 டிசம்பர் 6ம் தேதி ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023க்கான துவக்கவிழாவை இத்தாலியின் ரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்தியா சார்பில் அதிகாரிகள் குழு பங்கேற்றது. 
 • இதையடுத்து, சர்வதேச அளவில், சிறுதானியங்களை முன்னெடுத்துச் செல்வதை இந்தியாக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதனை அடைவதில், அனைத்து மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், விவசாயிகள், ஸ்டார்ட் –அப் நிறுவனங்கள், வணிகர்கள், உணவங்கள் மற்றும் இந்திய தூதரகங்கள் ஒருகிணைந்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிறுதானியங்கள் குறித்த விழிபுணர்வை ஏற்படுத்த வேண்டும்.
 • இதற்கான பணிகளில், ஜனவரி மாதம் 15 நாட்கள், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் சார்பில், 15 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 
 • இதில், விளையாட்டு வீரர்கள், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களைக் கொண்டு, விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுதல், வெபினார்களை நடத்துதல் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. 
 • இதேபோல், உணவு பதப்படுத்தும் துறை அமைச்சகத்தின் சார்பில், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீஹாரில் சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சிகள், நடத்தப்பட உள்ளன. 
 • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழ்நாடு, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், சரியான உணவைப் சாப்பிடுங்கள் என்ற உணவுக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 
 • இதேபோல் சட்டீஸ்கர், மிஸோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், ஜனவரிமாதம், சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிறுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 • ஜனவரி மாதம், பெல்ஜியத்தில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில், வேளாண் ஏற்றுமதியாளர்கள், அபெடா உள்ளிட்ட பல இந்திய வேளாண் அமைப்புகள், இந்திய சிறுதானியத்தை முன்னிறுத்தும் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த உள்ளன. 
 • இதேபோல், 140 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், சிறுதானிய ஆண்டு 2023-றைக் கொண்டாடும் வகையில், அந்நாடுகள் வாழ் இந்தியர்கள் பங்கேற்கும், கண்காட்சிகள், உணவுத் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றை நடத்தும். இந்த ஆண்டு முழுவதும் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக ஜனவரி மாதத்தில் அஜெர்பெய்ஜனில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
 • இதேபோல் ஜி-20 கூட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டினருக்கு, சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடும் அனுபவத்தை வழங்குதல், விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினருடன் கலந்துரையாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.  
ENGLISH
 • DA&FW aims to promote cultivation and consumption of Millets at a larger scale and bring it to the entire globe through IYM
 • Central ministries, states and Indian embassies allocated a focussed month in 2023 to carry out various activities for promotion of IYM and increase awareness about benefits of millets
 • January 2023 is the focussed month for the Ministry of Sports and Youth Affairs, Government of India and States of Chhattisgarh, Mizoram and Rajasthan for conducting events/ activities for IYM
 • Spearheaded by the Prime Minister, the Government of India sponsored the proposal for International Year of Millets (IYM) 2023 which was accepted by the United Nations General Assembly (UNGA). The declaration has been instrumental for the Government of India to be at the forefront in celebrating the IYM. The PM of India, Shri Narendra Modi has also shared his vision to make IYM 2023 a ‘People’s Movement’ alongside positioning India as the ‘Global Hub for Millets’.
 • ‘Millets’ were among the first crops to be domesticated in India with several evidence of its consumption during the Indus valley civilization. Being grown in more than 130 countries at present, Millets are considered traditional food for more than half a billion people across Asia and Africa. In India, millets are primarily a kharif crop, requiring less water and agricultural inputs than other similar staples. Millets are important by the virtue of its mammoth potential to generate livelihoods, increase farmers’ income and ensure food & nutritional security all over the world.
 • Recognising the enormous potential of Millets, which also aligns with several UN Sustainable Development Goals (SDGs), the Government of India (GoI) has prioritized Millets. In April 2018, Millets were rebranded as “Nutri Cereals”, followed by the year 2018 being declared as the National Year of Millets, aiming at larger promotion and demand generation. The global millets market is projected to register a CAGR of 4.5% during the forecast period between 2021-2026.
 • On 6th December 2022, the Food and Agriculture Organization (FAO) of the United Nations, organized an opening ceremony for the International Year of Millets – 2023 at Rome, Italy. The event was attended by a delegation of senior government officials from India. Next in the series, prior to the year-long celebration of ‘International Year of Millets (IYM) 2023’, the Department of Agriculture & Farmers Welfare hosted a special ‘Millet Luncheon’ for the Members of the Parliament at the Parliament house.
 • The Department of Agriculture & Farmers Welfare has taken a proactive multi-stakeholder engagement approach (engaging all the central government ministries, states/UTs, farmers, start-ups, exporters, retail businesses, hotels, Indian Embassies etc.) to achieve the aim of IYM 2023 and taking Indian millets globally. Ministries, states and Indian embassies have been allocated focussed months in 2023 to carry out various activities for promotion of IYM and increase awareness about benefits of millets for the Consumer, Cultivator and Climate.
 • Among central ministries, the activities related to IYM for the month of January 2023 will be kick started by the Ministry of Sports and Youth Affairs, Government of India. The ministry has planned 15 activities over 15 days in January which include engaging sports persons, nutritionists and fitness experts through video messages, conducting webinars on millets with leading nutritionists, dieticians and elite athletes, promotion amplification through Fit India App, etc. Some of the other ministries which have planned events in January are Ministry of Food Processing Industries which will be organizing Millet Fair-cum-exhibitions in Andhra Pradesh, Bihar and Madhya Pradesh; FSSAI will organize Eat Right Melas in Punjab, Kerala and Tamil Nadu etc.
 • With respect to states, Chhattisgarh, Mizoram and Rajasthan have been allocated the month of January for carrying out specific activities for sensitization and promotion of IYM. The states will be conducting millet centric activities including mahotsavs/ melas and food festivals, training of farmers, awareness campaigns, workshops/ seminars, placement of hoardings and distribution of promotional material at various key locations in the state, etc. Other states that are organizing similar activities in the month of January include Maharashtra, Uttarakhand and Punjab.
 • During January 2023, Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) and DA&FW will be participating in the Trade Show in Belgium wherein a multi-stakeholder delegation with representatives from DA&FW, APEDA, start-ups, exporters and Farmer Producer Organizations (FPOs) will showcase the diversity of Indian millets through RTE and RTC millet-based products marketed by Indian companies, B2B, B2G interactions etc.
 • Moreover, Embassies of India across more than 140 countries will be participating in celebration of IYM during 2023 by conducting side events on IYM involving the Indian Diaspora through exhibition, seminars, talks, panel discussions, etc. In January, Embassy of India in Azerbaijan and Embassy of India in Belarus will be conducting activities such as B2B meeting with the participation of local chambers, food bloggers, importers of food items and local restaurants etc. Cooked Millets dish exhibitions/ contests will be organized with the help of Indian diaspora and Millets dishes will be served as part of the Republic Day celebrations. The High Commission of India in Abuja and Consulate General of India in Lagos, as part of promotion of IYM, have planned a Millets Food Festival and a Millets Food preparation competition in January 2023. The Millets Food Festival would be held at the High Commission premises and provide stalls for preparation with invitees including both Nigerian dignitaries and Indian community.
 • Towards this endeavour, through a collaborative approach, the DA&FW urges everyone including the International Organizations, Academia, Hotels, Media, Indian Diaspora, Start-up communities, Civil Society, and all others in the Millets value-chain to come forward and join hands to revive the forgotten glory of ‘Miracle Millets’ through the grand celebration of International Year of Millets - 2023.
 • Millets are also an integral part of the G-20 meetings and delegates will be given a true millet experience through tasting, meeting farmers and interactive sessions with start-ups and FPOs.
 • The spirit of the whole of government approach is truly being seen in the celebration of the International Year of Millets 2023.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel