Home INDIA CURRENT AFFAIRS அந்தமான் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு 'பரம்வீர் சக்ரா' விருதாளர்கள் பெயர் 21 islands in Andaman and Nicobar are named 'Paramveer Chakra' award holders
அந்தமான் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு 'பரம்வீர் சக்ரா' விருதாளர்கள் பெயர் 21 islands in Andaman and Nicobar are named 'Paramveer Chakra' award holders
சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள், பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2021ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி நேதாஜியின் 126-வது பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்பட்டது. READ MORE ABOUT - நேதாஜி ஜெயந்தி அல்லது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி அல்லது பராக்ரம் திவாஸ் / PARAKRAM DIWAS OR NETAJI JAYANTI
இதையொட்டி, அந்தமான்-நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, 'பரம்வீர் சக்ரா' விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார். இதன்படி அந்த தீவுகளுக்கு ஜதுநாத் சிங், ராம் ரகோபா ராணே, கரம் சிங், சோம்நாத் சர்மா, ஜோகிந்தர் சிங்,தன்சிங் தாபா, குர்பச்சான் சிங், பிருசிங், ஆல்பர்ட், ஆர்திசிர், அப்துல் ஹமீது, ஷிதான் சிங், ராமசாமி பரமேஸ்வரன், நிர்மல்ஜித் சிங், அருண்,ஹோஷியார் சிங், மனோஜ் பாண்டே,விக்ரம் பத்ரா, பணா சிங், யோகேந்திர சிங், சஞ்சய் குமார் ஆகியோரது பெயர்கள் சூட்டப்பட்டன. அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் நடைபெற்ற பெயர் சூட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார்.
0 Comments