Recent Post

6/recent/ticker-posts

ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் / Defense Ministry approves procurement of indigenously manufactured missiles worth Rs 4,276 crore

  • பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளை ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் வழங்கியுள்ளது.
  • குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (விசோராட்ஸ்), ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இந்த வகை ஏவுகணைகளை ரூ.1,920 கோடி மதிப்பில் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • விசோராட்ஸ் ஏவுகணைகள் சீன எல்லையில் பயன்படுத்த தேவைப்படுகின்றன. எளிதில் தூக்கிச் செல்லக் கூடிய விசோராட்ஸ் ஏவுகணைகளை கரடுமுரடான மலைப்பகுதிகள் மற்றும் கடலில் பயன்படுத்தி, எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்க முடியும்.
  • இதுதவிர, 500 ஹெலினா ஏவுகணைகளை வாங்கவும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இலகு ரக ஹெலிகாப்டரில் பொருத்தப்படும் இந்த ஏவுகணைகள், எதிரிநாட்டு பீரங்கி வாகனங்களைத் தகர்க்கும் திறன் வாய்ந்தவை. இந்த வகை ஏவுகணைகள், ராணுவத்தின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும்.
  • கடற்படையின் பயன்பாட்டுக்காக, சிவாலிக் வகை போர்க் கப்பல்களில் பயன்படுத்தக்கூடிய பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளின் லாஞ்சர்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள், அடுத்த தலைமுறை ஏவுகணைகளைக் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel