Recent Post

6/recent/ticker-posts

6வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2022 / 6th NATIONAL BOXING CHAMPIONSHIP 2022

  • ஹரியானாவில், ஆண்களுக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடந்தது. இதில் 13 எடைப்பிரிவுகளில், மொத்தம் 386 வீரர்கள் பங்கேற்றனர். 
  • இதன் 63.5 கிலோ எடைப்பிரிவு பைனலில் அசாமின் ஷிவா தபா, ரயில்வே அணியின் அங்கித் நார்வல் மோதினர். அபாரமாக ஆடிய ஆறு முறை ஆசிய பதக்கம் வென்ற ஷிவா தபா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 
  • பின், 57 கிலோ எடைப்பிரிவு பைனலில் சர்வீசஸ் அணியின் முகமது ஹுசாமுதீன் 4-1 என, 2016ல் உலக யூத் சாம்பியன் பட்டம் வென்ற ரயில்வே அணியின் சச்சினை தோற்கடித்து தங்கத்தை கைப்பற்றினார்.
  • பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளி வென்ற சாகர், +92 கிலோ எடைப்பிரிவு பைனலில் இருந்து காயத்தால் விலகியதால் சர்வீசஸ் அணியின் நரேந்தர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கம் வென்றார். 
  • மற்ற எடைப்பிரிவு பைனலில் அசத்திய பிஷ்வாமித்ரா (51 கிலோ), சச்சின் (54 கிலோ), ஆகாஷ் (67 கிலோ), சுமித் (75 கிலோ) தங்கப்பதக்கம் வென்றனர். 
  • இத்தொடரில் 6 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என, 10 பதக்கங்களை அள்ளிய 'நடப்பு சாம்பியன்' சர்வீசஸ் அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. 
  • அடுத்த இரு இடங்களை முறையே ரயில்வே (2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்), பஞ்சாப் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம்) அணிகள் பிடித்தன

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel