Recent Post

6/recent/ticker-posts

கொல்கத்தாவின் ஜோகாவில் உள்ள குடிநீர், துப்புரவு மற்றும் தரத்திற்கான தேசிய மையத்தின் பெயரை ‘டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் என பின்னோக்கிய தேதியிட்டு மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் /

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கொல்கத்தாவின் ஜோகா குடிநீர், துப்புரவு மற்றும் தரத்திற்கான தேசிய மையத்தின் பெயரை, ‘டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் (SPM-NIWAS) பின்னோக்கிய தேதியிட்டு பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜோகா டைமண்ட் ஹார்பர் சாலையில், 8.72 ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • பயிற்சித் திட்டங்கள் மூலம் பொது சுகாதார பொறியியல், குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முதன்மையான நிறுவனமாக இந்த நிறுவனம் அமைந்துள்ளது. 
  • இத்தகைய திறன்கள் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள முன்னணி பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பொருத்தமாக அமையும். 
  • அதன்படி, பயிற்சி உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகம்,  மற்றும் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பொருத்தமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 
  • இந்த நிறுவனத்தில் பயிற்சியை எளிமையாக்கும் வகையில், நீர் தூய்மை மற்றும் சுகாதாரம் தொழில்நுட்பங்களின்  சிறிய மாதிரிகள் நிறுவப்பட்டுள்ளன.
  • டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, முன்னணி தலைவராகவும், தேசிய ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றியவராகவும் திகழ்ந்தார். 
  • தொழில் மயமாக்கலுக்கான உத்வேகத்துடன், திகழ்ந்த அவர், சிறந்த அறிஞர், கல்வியாளர் என பன்முக திறமைகளுடன்  விளங்கினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இளம் துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்தார். 
  • தற்போது புதிய  நிறுவனத்திற்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படுவது  அவரது அர்ப்பணிப்புடன் கூடிய பணியை ஊக்குவிப்பதுடன், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்வேகத்தையும் வழங்கும். இந்த நிறுவனம் 2022 டிசம்பரில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel