Recent Post

6/recent/ticker-posts

`தமிழ் நிலம்' இணையதளத்தில் வருவாய் துறைக்கான புதிய மென்பொருள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் / Chief Minister M. K. Stalin launched new software for revenue department on ``Tamil Nilam'' website

  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்ககத்தின் தமிழ் நிலம் இணையதளத்தில் (https://tamilnilam.tn.gov.in) நிறுவப்பட்டுள்ள, அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாகமென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • அதேபோல, மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காகபுதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
  • அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவில் மனைகளை கிரயம் பெறும்போது, ஒவ்வொருமனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியே மனு பெறும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு ஒரே மனைப் பிரிவில் உள்ள வீட்டு மனைகளை நிலஅளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக, நில அளவர் பல்வேறு நாட்களில் தனித்தனியே செல்லவேண்டியுள்ளது.
  • தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 1.50 லட்சம் உட்பிரிவு மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மனைப்பிரிவு சார்ந்தவை. எனவே, உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. 
  • தற்போது முதல்வர் தொடங்கிவைத்துள்ள புதிய மென்பொருள் மூலமாக மனைப் பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து, அவற்றின் உரிமையாளர் பெயரில் பதிவு செய்யப்படுவதால், பின்னாளில் மனைகளை உட்பிரிவு செய்யக் கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்படும்.
  • மனைப் பிரிவுகள் சார்ந்த உட்பிரிவு மனுக்களின் எண்ணிக்கை குறைந்து, மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கும் சூழல் ஏற்படும். மேலும், பட்டா மாற்றத்துக்காக மக்கள் மீண்டும் தனியேவிண்ணப்பிக்கவோ, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் செல்லவோ தேவையில்லை.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel