Recent Post

6/recent/ticker-posts

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார் / Chief Minister Nitish Kumar launched caste-wise census in Bihar

  • பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
  • இதை தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு பணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கணக்கெடுப்பு பணிக்காக பீகார் அரசு ரூ.500 கோடியை ஒதுக்கி உள்ளது. 
  • இதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பு பணி 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் 21ம் தேதி வரை நடக்கும் முதல் கட்ட பணியில், அனைத்து குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். 
  • அதைத் தொடர்ந்து மார்ச்சில் நடக்கும் 2ம் கட்ட கணக்கெடுப்பு பணியில், அனைத்து மக்களின் சாதி, உட்பிரிவு, மதம் மற்றும் அவர்களின் பொருளாதார நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. 
  • இந்த கணக்கெடுப்பு பணிக்காக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் டிஜிட்டல் வடிவில் சேகரிக்கப்படும். இந்த கணக்கெடுப்பு பணி வரும் மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel