Recent Post

6/recent/ticker-posts

தொழில்துறை வளர்ச்சியில் கருணாநிதி அரசின் சாதனைகள் / INDUSTRIES GROWTH ACHIEVEMENTS OF KARUNANITHI GOVERNMENT

TAMIL
  • தமிழகத்தில் முதன்முறை கழக அரசு பொறுப்பேற்றவுடன், உலகத்தரம் வாய்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிக்கும் சேலம் உருக்காலை-யை 1970-ம் ஆண்டு தமிழகத்துக்கு கொண்டு வந்தார் தலைவர் கலைஞர். 
  • சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் விதமாக, 1970-ம் ஆண்டு சிட்கோ நிறுவனத்தையும், பெரும் தொழில்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக 1971-ம் ஆண்டு “சிப்காட்” எனப்படும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தையும் (State Industrial Promotion Corporation of Tamil Nadu) கழக அரசு உருவாக்கியது. இவற்றுடன், 1971-ம் ஆண்டு திமுக ஆட்சியில் திருத்தம் செய்யப்பட்ட நில உச்சவரம்பு சட்டமும் தொழில் வளர்ச்சிக்கு, பெரும் பங்காற்றியது.
  • முதற்கட்டமாக, சிப்காட் நிறுவனம் மூலம், 1973-ம் ஆண்டு ராணிப்பேட்டையில் 729.78 ஏக்கர் பரப்பில் தொழில் வளாகம் உருவாக்கப்பட்டு, 168 கோடி ரூபாய் முதலீட்டில் 107 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன.
  • 1974-ம் ஆண்டு ஓசூரில் 1,236 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாவது தொழில் வளாகம் அமைக்கப்பட்டு, 500 கோடி ரூபாய் முதலீட்டில் 186 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இந்த இரண்டு தொழில் வளாகங்கள் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றனர்.
  • இதன் பிறகு 1989-ம் ஆண்டு மீண்டும் ராணிப்பேட்டையில் 133 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் உருவாக்கப்பட்டு, 99 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம், 3,400 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல், ஓசூரிலும் 457 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் தொடங்கப்பட்டு, 64 புதிய தொழில்களுடன் ஏறத்தாழ 6 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
  • 1996-ம் ஆண்டு நான்காவது முறையாக கழக அரசு அமைந்த பிறகு, திருப்பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் சிப்காட் நிறுவனத்தால் புதிய தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டடன. செய்யாறு, நெமிலி ஆகிய இடங்களிலும் புதிய தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டன.
  • 1996-ம் ஆண்டு இருங்காட்டுக் கோட்டையில், 2,450 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 1 லட்சத்து 20,000 கார்களை உற்பத்தி செய்யும் திறனுடன் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கழக ஆட்சியின்போது தொடங்கி வைக்கப்பட்டது. ஏறத்தாழ 2,500 தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பினையும், 25,000 தொழிலாளர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பினையும் வழங்கிய ஹூண்டாய் தொழிற்சாலை, வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கணிசமான அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்தது.
  • இதன் அடுத்த கட்டமாக, தமிழ்நாடு தொழிற்துறை முன்னேற்றத்துக்கென 1997-ம் ஆண்டு ‘நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டு வந்தது கழக அரசு. இந்தச் சட்டம் மூலம் தொழில் வளர்ச்சிக்கென நிலத்தை கையகப்படுத்துவது எளிதாகியது. தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகள் வழங்கவும் புதிய விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1998-ம் ஆண்டு, திருவள்ளூரில் மிட்சுபிசி லேன்சர் கார் தொழிற்சாலை ஆண்டுக்கு ஒரு லட்சம் கார் தயாரித்திடும் ஆற்றலுடன், ஏறத்தாழ 320 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இங்கு, 800 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பும், 6,400 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பும் பெற்றனர்.
  • 1999-ம் ஆண்டு சென்னை அடுத்த மறைமலைநகரில் 1,700 கோடி ரூபாய் முதலீட்டில் ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. ஆண்டுக்கு 1 லட்சம் கார்களைத் தயாரித்திடும் திறனுடன் தொடங்கி வைக்கப்பட்ட இத்தொழிற்சாலை, 2,000 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பையும், 10,000 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பையும் வழங்கியது.
  • சேலம் அயர்ன் அண்டு ஸ்டீல் கம்பெனி லிமிடெட் தொழிற்சாலை 500 கோடி ரூபாய் முதலீட்டில் 31.3.99 அன்று தொடங்கப்பட்டது.
  • ஜி.எம்.ஆர்.வாசவி தனியார் மின் உற்பத்தித் திட்டம் 825 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை பேசின் பிரிட்ஜில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது.
  • தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில் துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டம் 202 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 நவம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடியில் உரம் தயாரிக்கும் ஸ்பிக் தொழிற்சாலை, ஆலங்குளத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
  • இருங்காட்டுக் கோட்டையில் ரெனால்ட்ஸ் பால் பென் காம்பொனன்ட்ஸ் தொழிற்சாலை 30 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியைத் தொடங்கியது.
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், 2,800 ஏக்கர் பரப்பளவில் 110 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பெருந்துறை வளர்ச்சி மையம் 2000-மாவது ஆண்டு ஜூலை 1-ம் தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
  • ஆப்டிக் பைபர் கேபிள் தொழிற்சாலை தமிழ்நாடு அரசு நிறுவனமான டிட்கோ, மத்திய அரசு நிறுவனமான டி.சி.ஐ.எல். (Telecommunications Consultants India Limited) மற்றும் ஜப்பான் நாட்டின் ஃப்யூஜிகூரா நிறுவனம் ஆகியவை இணைந்து மிக நவீனமான ஆப்டிக் பைபர் டெலிகாம் கேபிள்ஸ் (Optic Fibre Telecom Cables) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 28.50 கோடி ரூபாய் செலவில் 26.5.2000 அன்று நிறுவியது கழக அரசு.
  • தொழிற்சாலைகளுக்கான வாயுக்களை தயாரிக்கும் ப்ராக்ஸ் ஏர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (PRAX AIR INDIA PRIVATE LIMITED) தொழிற்சாலை 60 கோடி ரூபாய் முதலீட்டில் 21.8.2000 அன்று திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிறுவனம் மொத்தம் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு தொழில் பிரிவுகளை அமைத்துள்ளது.
  • இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பிரெஞ்சு நாட்டுத் தொழில்நுட்பத்துடன் 525 கோடி ரூபாய் செலவில் செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை 27.9.2000 அன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம், ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் அளவுக்கு அன்னியச் செலாவணி கிடைக்கப் பெற்றது.
  • ஓசூரில், 24.85 கோடி ரூபாய் முதலீட்டில் மலர் பதப்படுத்தும் டான் ப்ளோரா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்க் - மலர்த் தொழில் பூங்கா 220 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் 500 பேருக்கு நேரடியாகவும், 1,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.
  • சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மெட்ராஸ் ரீபைனரீஸ் நிறுவனத்தின் மணலி தொழிற்சாலை பிரிவு 2,360 கோடி ரூபாய் செலவில் 30 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணையை சுத்திகரிப்பு செய்யும் திறனுடையதாக விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
  • கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் கிராமத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பென்னார் ரிஃபைனரீஸ் லிமிடெட் கம்பெனியின் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை 3,480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 6.5 மில்லியன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவியது. இந்நிறுவனமும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கியது.
ENGLISH
  • In 1970, after taking charge of the Corporation Government for the first time in Tamil Nadu, President Kalainar brought Salem Smelter, a world-class stainless steel manufacturer, to Tamil Nadu in 1970.
  • As a seed for the development of small and micro enterprises, the Corporation Government created CITCO in 1970 and State Industrial Promotion Corporation of Tamil Nadu in 1971 to encourage large industries and private enterprises. Along with this, the Land Ceiling Act which was amended in 1971 during the DMK regime also contributed greatly to the development of the industry.
  • In the first phase, an industrial complex was created in 1973 at Ranipettai with an investment of 168 crore rupees and 107 new industries were started at Ranipettai in 1973.
  • In 1974, a second industrial complex was set up at Hosur on an area of 1,236 acres and 186 factories were started with an investment of Rs 500 crore. Through these two industrial complexes, approximately 20 thousand youths got job opportunities.
  • After this, in 1989 again, a second division industrial complex was created in Ranipet on 133 acres of land and 99 new industries were started. Through this, 3,400 youths were given employment opportunities. Similarly, in Hosur too, a second industrial complex has been started on an area of 457 acres, providing employment to approximately 6,000 youth with 64 new industries.
  • After the formation of the Corporation Government for the fourth time in 1996, new industrial complexes were set up by Chipcott at Thirupperumbudur, Irungat Fort and Kummidipoondi. New industrial complexes were also set up at Seyyar and Nemili.
  • In 1996, Hyundai Motor Company was launched at Irungaduk Fort with an investment of Rs 2,450 crore and a capacity of 1,20,000 cars per annum under the Corporation rule. Providing direct employment to approximately 2,500 workers and indirect employment to 25,000 workers, the Hyundai factory earned substantial foreign exchange by exporting cars to foreign countries.
  • As a next step, the Union government brought the Land Acquisition Act in 1997 for the development of the Tamil Nadu industry. This Act made it easier to acquire land for industrial development. A new application form has also been introduced to issue permits in a single-window manner to entrepreneurs in Tamil Nadu.
  • In 1998, the Mitsubishi Lancer car factory at Tiruvallur was set up at a cost of approximately 320 crore rupees with the capacity to manufacture one lakh cars per annum. Here, more than 800 people got direct employment and more than 6,400 people got indirect employment.
  • In 1999, a Ford Motor factory was set up in Thirammalayanagar next to Chennai with an investment of 1,700 crore rupees. Launched with a capacity of 1 lakh cars per annum, the factory has provided direct employment to more than 2,000 people and indirect employment to more than 10,000 people.
  • The factory of Salem Iron and Steel Company Limited was commissioned on 31.3.99 with an investment of Rs.500 crores.
  • The GMR Vasavi Private Power Generation Project started production in March 1999 at the Chennai Basin Bridge with an investment of Rs 825 crore.
  • The port deepening project was launched in November 1999 with an investment of 202 crore rupees by the Tuticorin Port Authority. Fertilizer spike factory in Thoothukudi and cement factory in Alankulam.
  • The Reynolds Ball Pen Components factory at Irungat fort started production in March 2000 with an investment of Rs 30 crore.
  • The Perundurai Development Center was inaugurated on 1st July 2000 in Perundurai, Erode District, on an area of 2,800 acres at a cost of Rs.110 crore.
  • Optic Fiber Cable Factory Tamil Nadu Government Corporation DITCO, Central Government Corporation TCIL. (Telecommunications Consultants India Limited) and Fujikura Company of Japan jointly established the most modern Optic Fiber Telecom Cables manufacturing plant on 26.5.2000 at a cost of 28.50 crore rupees.
  • PRAX AIR INDIA PRIVATE LIMITED (PRAX AIR INDIA PRIVATE LIMITED) factory for manufacturing industrial gases was inaugurated on 21.8.2000 at Thirupperumbudur Industrial Complex by President Kalain with an investment of Rs.60 Crores. The company has set up various business units with a total valuation of Rs 175 crores.
  • St. Cobain Glass Factory was started on 27.9.2000 at a cost of Rs.525 Crores with French technology at Chipkot Complex, Irungattukottai. Through this, one hundred crore rupees of foreign exchange was made available every year.
  • 24.85 Crore Flower Processing Don Flora Infrastructure Park - Floral Industrial Park will be set up in 220 acres at Hosur.
  • At Hosur, Flower Processing Don Flora Infrastructure Park - Floral Industrial Park has been set up in an area of 220 acres with an investment of Rs 24.85 crore. Through this, 500 people were directly employed and 1,000 people were indirectly employed.
  • Madras Refineries' Manali unit, which has been renamed Chennai Petroleum Corporation Limited, has been expanded to a capacity of 30 lakh metric tonnes of crude oil at a cost of Rs 2,360 crore. This provided employment opportunities to many people.
  • Bennar Refineries Limited Company of Andhra State's Petroleum Refinery has set up a refinery with a capacity of 6.5 million barrels of crude oil per annum at a cost of Rs 3,480 crore at Thiruchopuram village in Cuddalore district. The company also provided employment to thousands of people.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel