சர்வதேச அளவில் அதிக நீர்மூழ்கி கப்பல்களை கொண்ட நாடாக சீனா முன்னணியில் உள்ளது. அந்த நாட்டின் கடற்படையில் 74 நீர்மூழ்கிகள் உள்ளன. அமெரிக்காவிடம் 69, ரஷ்யாவிடம் 66, ஜப்பான், தென்கொரியாவிடம் தலா 22 நீர்மூழ்கிகள் உள்ளன.
ரூ.50,000 கோடி மதிப்பில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து ரூ.50,000 கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இதன்படி பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டுமான தளத்தில் நீர்மூழ்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கல்வாரி கடந்த 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. கடந்த 2019-ல் ஐஎன்எஸ் காந்தேரி,கடந்த 2021-ம் ஆண்டில் ஐஎன்எஸ்கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகி யவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன.
இந்த வரிசையில் ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. மும்பைகடற்படை தளத்தில் நடந்த விழாவில் கடற்படை தளபதி ஹரிகுமார் இந்த நீர்மூழ்கியை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
0 Comments