Recent Post

6/recent/ticker-posts

தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் உரையாற்றினார் / The Prime Minister addressed the first All India State Ministers' Conference on Water through video

  • தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
  • தண்ணீர் தொலைநோக்கு @ 2047 என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். 
  • நீடித்த வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சிக்காக நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்த வழிவகைகளை விவாதிக்க முக்கியக் கொள்கை இயற்றுவோரை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின் நோக்கமாகும்.
  • இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தண்ணீர் பாதுகாப்புக்காக இந்தியா மேற்கொண்டுள்ள அளப்பரிய பங்களிப்பு குறித்து பேசி, நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர்களின் முதலாவது அகில இந்திய மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். 
  • நமது அரசியலமைப்பில், தண்ணீர் என்ற பொருள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது, நாட்டின் கூட்டு இலக்குகளை அடைய மாநில அரசுகளின் நீர் பாதுகாப்புக்கான முயற்சிகள் பெரிதும் உதவும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 
  • “அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்தப் பெருவிழாவின் பயணத்தின் முக்கியமான பரிமாணமாக தண்ணீர் தொலைநோக்கு @ 2047 உள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
  • தண்ணீர் குறித்து முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்கள் ஆண்டு மாநாட்டில் அனைத்து மாநிலங்களின் நீர்வள அமைச்சர்களும் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel