Recent Post

6/recent/ticker-posts

செகந்திராபாத் உடன் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார் / Prime Minister Modi flagged off the Vande Bharat Express train connecting Secunderabad to Visakhapatnam

  • செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • இந்த ரயில் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். மேலும், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதலாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.
  • இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், கிஷன் ரெட்டி, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வந்தே பாரத் விரைவு ரயில்
  • இது இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். 
  • இதன் மூலம் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் பயண நேரம் பன்னிரண்டரை மணி நேரத்திலிருந்து எட்டரை மணி நேரமாகக் குறையும்.
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலின் பெட்டிகள் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளன. இது ரயில் பயணிகளுக்கு வேகமான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும்.
  • வந்தே பாரத் விரைவு ரயிலின் அறிமுகம் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், வசதியான மற்றும் வேகமான பயண முறையை வழங்கவும் உதவும். 
  • இந்த ரயில் புறப்பட்ட 52 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதோடு, அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்வது போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel