மத்திய இளைஞர் நலன் துறையும் கர்நாடக அரசும் இணைந்து ஜனவரி 12ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 'தேசிய இளைஞர் விழா'வுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
கர்நாடக மாநிலத்தின் ஹூப்பாளியில் 26-வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ம் தேதி, அவரது கொள்கைகள் மற்றும் போதனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இளைஞர் திருவிழாவிற்கு, முன்னேற்றம் அடைந்த இளைஞர்களால் வளர்ச்சியடையும் இந்தியா என்பதே கருப்பொருளாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடகா ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் திரு அனுராக் சிங் தாக்கூர், திரு நிசித் பிரமானிக் மற்றும் கர்நாடக மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments