சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஹெச்) நடத்தும் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, ஒடிஸாவில் புதன்கிழமை தொடங்கியது.
போட்டி அதிகாரப்பூா்வமாக புதன்கிழமை தொடங்கிய நிலையில், இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் மோதும் ஆட்டங்கள் யாவும் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி, 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், சா்வதேச ஹாக்கி சம்மேளன தலைவா் தயாப் இக்ரம், ஹாக்கி இந்தியா தலைவா் திலிப் திா்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகா்கள் மைதானத்தில் கூடியிருக்க, ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அப்போது பேசிய தயாப் இக்ரம், தொடா்ந்து 2-ஆவது முறையாக உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை நடத்துவதற்காக ஒடிஸாவை பாராட்டினாா்.
0 Comments