Recent Post

6/recent/ticker-posts

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவி தொகை - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் / 39 lakh educational assistance to 120 students living in Urban Habitat Development Board flats - Chief Minister M.K.Stalin

  • வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் கல்வி உதவித் தொகை பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 141 மாணவ, மாணவியர்களுக்கு எச்டிஎப்சி வங்கியின் சார்பில் ரூ.42 லட்சத்து 30 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. 
  • அதனைத் தொடர்ந்து, இந்த வருடமும் மருத்துவம், பொறியியல், இளங்கலை மற்றும் முதுகலை போன்ற உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் 120 மாணவ, மாணவியர்களுக்கு 39 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 12 மாணவ, மாணவியர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
  • இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு வீட்டுவசதி மற்றும் துறையின் செயலாளர் செல்வி அபூர்வா, துறையின் இயக்குநர் கோவிந்த ராவ், எச்.டி.எப்.சி வங்கியின் தமிழ்நாடு தலைவர் குமார் சஞ்சீவ், மண்டல தலைவர் ரமேஷ் வங்குரி, வாரிய தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் நிர்மல்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel