சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான சிகாகோ மாநாட்டு ஒப்பந்தம் 1944ல் பிரிவு 3 பிஐஎஸ், பிரிவு 50 (ஏ) மற்றும் பிரிவு 56 ஆகிய மூன்று நெறிமுறைகளை அங்கீகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approval to ratify three Protocols Article 3 BIS, Article 50(a) and Article 56 of the Chicago Convention on International Civil Aviation Agreement 1944
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான சிகாகோ மாநாட்டு ஒப்பந்தம் 1944ல் பிரிவு 3 பிஐஎஸ், பிரிவு 50 (ஏ) மற்றும் பிரிவு 56 ஆகிய மூன்று நெறிமுறைகளை அங்கீகரிக்க பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சிகாகோ மாநாட்டில் வரையறுக்கப்பட்ட பிரிவுகள் சம்பந்தப்பட்ட நாடுகளில் கடமைகள் மற்றும் முன்னுரிமைகளை எடுத்துக் கூறியுள்ளன.
அத்துடன், சர்வதேச விமானப் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் அமைப்பான ஐசிஏஓ-வின் தரநிலைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நிலையான நடைமுறைகளை ஏற்று செயல்படுவதை சிகாகோ மாநாட்டின் விதிமுறைப் பிரிவுகள் ஊக்குவிக்கின்றன.
கடந்த 78 ஆண்டுகளில் சிகாகோ மாநாட்டு ஒப்பந்தப் பிரிவுகள் சிலமுறை திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளன. இந்தியா அவ்வப்போது இந்தத் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது.
தற்போது சிகாகோ மாநாட்டின் ஒப்பந்தத் தீர்மானத்தில் கீழ்க்கண்ட பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிகாகோ மாநாட்டு ஒப்பந்தம் 1944ல் பிரிவு 3பிஐஎஸ்-ஐ சேர்ப்பதற்கான நெறிமுறை, உறுப்பு நாடுகள் சிவில் விமானங்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நடைமுறையை தடுப்பது குறித்து எடுத்துரைக்கிறது. (இது 1984 மே மாதத்தில் கையெழுத்தானது)
சர்வதேச விமானம் அமைப்பின் (ஐசிஏஓ) பலத்தை 36 லிருந்து 40 ஆக உயர்த்த சிகாகோ ஒப்பந்தம் 1944ல் பிரிவு 50(ஏ) ஐ திருத்துவதற்கான நெறிமுறை எடுத்துரைக்கிறது. (இது 2016 அக்டோபர் மாதத்தில் கையெழுத்தானது)
விமான செலுத்துதல் ஆணையத்தின் பலத்தை 18லிருந்து 21 ஆக உயர்த்துவதை சிகாகோ ஒப்பந்தத்தின் 56வது பிரிவின் திருத்தம் எடுத்துரைக்கிறது. (இது 2016 அக்டோபர் மாதத்தில் கையெழுத்தானது)
இந்த ஒப்புதல் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான மாநாட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளில் இந்தியா உறுதியுடன் உள்ளதை எடுத்துரைப்பதாக அமையும்.
இந்த ஒப்புதல் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான அம்சங்களில் இந்தியா அதிக பங்கேற்பை அளிக்க சிறந்த வாய்ப்புகளை வழங்கும்
0 Comments